தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஆவணங்களில் தேசிய நாணய சின்னத்தை நீக்கியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என விமர்சித்துள்ளார்.