வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், திமுக கூட்டணியில் இருந்து விலக சொல்லி வேல்முருகனுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகுவாரா? அல்லது மா.செ.க்களை சமாதானப்படுத்துவாரா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேல்முருகன்சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தற்போதே சிக்கல் எழ தொடங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. கடந்த தேர்தலில் அந்த கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆனார்.கூட்டணி தலைமைக்கு தெரிவிக்கும் கருத்து, சர்ச்சைதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டமன்றத்தில் அடிக்கடி ஆவேசம் பொங்க பேசும் வேல்முருகன், கூட்டணி தலைமைக்கு அவர் தெரிவிக்கும் கருத்து பல நேரங்களில் சர்ச்சையும் ஆகியிருக்கிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை என சபாநாயகருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேல்முருகன், அமைச்சர்கள் சிலருடன் பேரவையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. ஒரு முறை கூட பேரவையில் வேல்முருகன் கோபத்துடன் பேசியதை பார்த்து, இத்தகைய செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே வருத்தம் தெரிவித்தார்.கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லைஇந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 3 நாட்களாக மாவட்ட செயலாளர்களுடன் வேல்முருகன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் ஐக்கியமாகும் போதே சில கோரிக்கைகளை முன் வைத்து தான் கூட்டணியில் இணைந்தார் வேல்முருகன். அந்த வகையில், தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்புக்கு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றுவது, சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.மரியாதையை திமுகவினர் கொடுக்கவில்லைசீமானுக்கு அடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியும் தமிழ் தேசிய அரசியல் பேசக் கூடிய கட்சி தான் என்ற நிலையில், த.வா.க.வின் முக்கியமான கோரிக்கைகளை கூட்டணி தலைமையான திமுக நிறைவேற்றாதது மாவட்ட செயலாளர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. அதோடு, கூட்டணி கட்சிக்கு தேவையான மரியாதையை திமுகவினர் கொடுக்கவில்லை என புலம்பிய நிர்வாகிகள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டால் கூட அதிகாரிகள் கொடுக்க மறுப்பதாக ஆதங்கத்தை கொட்டியதாக கூறப்படுகிறது. அதோடு, கூட்டணியில் சேரும் போதே வாரிய தலைவர் பதவி வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கோரிக்கை முன் வைத்த நிலையில், அதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார்கள்.பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன சிரமம்?இதனால், வருகிற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் மாவட்ட செயலாளர்கள், த.வா.க. வலுவாக இருக்கும் தொகுதிகளில் தனித்து கூட போட்டியிடலாம் என யோசனை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் சிலர் மிகவும் வருத்தத்துடன் காங்கிரஸ் இடம்பெற்ற திமுக கூட்டணியில் இருந்த நமக்கு, பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன சிரமம் இருந்து விடப் போகிறது என உரிமையுடன் கேட்கவே, என்ன சொல்வது என தெரியாமல் முழித்து நின்றாராம் வேல்முருகன்.கூட்டணியிலேயே நீடிப்பதா? வேறு முடிவை எடுப்பதா?தமிழ் தேசிய அரசியல் பேசும் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி, ஈழ விடுதலை விஷயத்தில் காங்கிரஸுக்கு நேர் எதிர் நிலைப்பாட்டை கொண்டது என்ற நிலையில், அதனை சுட்டிக்காட்டி நிர்வாகிகள் புலம்பியதாக சொல்லப்படுகிறது. மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு வருகிற தேர்தலிலும் ஒரு சீட்டு தான் ஒதுக்க திமுக முடிவு செய்திருக்கும் நிலையில், அதுவும் த.வா.க.வினர் இடையே சலிப்பை கொடுத்திருக்கிறது. இதனால், வருகிற தேர்தலில் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதா? அல்லது வேறு முடிவை எடுப்பதா? என்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் வேல்முருகன். வட மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் வேல்முருகனுக்கு ஆதரவு இருக்கும் நிலையில், திமுக தலைமையும் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. Related Link KASக்கு எதிர் வேட்பாளர் - தயங்கும் EPS?