news-tamil-logo

3/22/2026, 7:34:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கரூர் சம்பவம், சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனு
tv

Also Watch

tv

Read this

கரூர் சம்பவம், சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனு

பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் மனு

Posted on: Oct 07, 2025 08:36 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வரும் அக். 10ஆம் தேதி தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிபிஐ விசாரணை கோரி, விஜய் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. வரும் அக்.10ஆம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved