Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரி, மன்னாடிபட்டு தொகுதிக்குட்பட்ட சந்தை புதுக்குப்பம் பகுதியில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ அருள் முருகன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கேக் வெட்டி, ஆயிரம் பெண்களுக்கு இனிப்பான லட்டுடன், பட்டுப் புடவைகளை வழங்கினார். இதனை பெண்கள் ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.