இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்