news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை, வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை, வானிலை தகவல்

வெப்ப நிலை எப்படி?

46

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் கணித்துள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை
இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
கடலோர கர்நாடக பகுதிகளில் இருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

நாளை மழை வாய்ப்பு
இதனால், தமிழகத்தில் நாளை ஜூன் 9ஆம் தேதி
வேலூர்
ராணிப்பேட்டை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
சென்னை
செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள்
நீலகிரி
கோவை
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
கன்னியாகுமரி
தருமபுரி
சேலம்
ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 10ஆம் தேதி
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
கன்னியாகுமரி

ஜூன் 11ஆம் தேதி
நீலகிரி
கோவை
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
ஈரோடு
சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்ப நிலை எப்படி?
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 12ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Related Link
அதிமுக எம்.எல்.ஏ.விடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் ரமேஷ்

அதிமுக எம்.எல்.ஏ.விடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் ரமேஷ்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 39 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau