திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை.