Also Watch
Read this
Posted on: Apr 21, 2025 03:35 AM
By: Srini Vasan

ஜம்மு- காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர்.
40 க்கும் மேற்பட்ட வீடுகள், ஹோட்டல்கள், கடைகள் இடிந்து சேதமான நிலையில், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.
ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு அருகிலுள்ள தரம்குண்ட் மற்றும் பக்னா கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மாவட்ட காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
100 பேர் பத்திரமாக மீட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் இடைவிடாத மழை காரணமாக அருகிலுள்ள நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved