மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனைதானா? என கேள்வி எழுப்பியள்ள முதலமைச்சர், தமிழ்நாடு என்ற பெயர்கூட பட்ஜெட்டில் தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? என்றும் காட்டமாக சாடியுள்ளார். மேலும், மத்திய அரசு, தனது திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.