தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் தயாரிப்புக் குழுவை அறிவித்தார் அக்கட்சித் தலைவர் விஜய் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைப்புஇதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு...தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள். தொழிலாளர் அமைப்புகள். பொருளாதார, தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள். பல்வேறு ஊழியர் சங்கங்கள். விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - 'உங்க கனவ சொல்லுங்க' திட்டம் தொடக்கம்