ராஜஸ்தான்... கர்ப்பிணி மகளை காண வீட்டிற்கு சென்ற பெற்றோர். வீட்டின் தரையிலும், சுவற்றிலும் ரத்தக்கறை இருந்ததால் அதிர்ச்சி. வயல்வெளியில் குவிக்கப்பட்டு கிடந்த மரக்கட்டைக்குள் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலம். தலைமறைவாக இருந்த கணவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். ஈவு இரக்கமின்றி மனைவி எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?கணவன் வீட்ல வசிச்சுட்டு இருந்த மகள் குடியாவ பாத்து நலன் விசாரிக்கிறதுக்காக வீட்டுக்கு போய்ருக்காங்க பெற்றோர். அப்ப வீட்ல யாருமே இல்ல, ஆனா வீட்டு சுவரு, தரையிலையும் ஒரே ரத்தக் கறையா இருந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச பெற்றோர், மகள தேடி அந்த ஏரியா ஃபுல்லா பாத்துருக்காங்க. அப்ப அங்குள்ள ஒரு வயல்வெளிப் பகுதியில, இருந்த மரக்கட்டை குவியலுக்குள்ள குடியா பாதி எரிஞ்ச நிலையில சடலமாக கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சு, விசாரணையில இறங்குனாங்க.ராஜஸ்தான்ல உள்ள தோல்பூர் பகுதிய சேந்த பங்கஜ் தாகூருக்கும், 24 வயசு குடியா-ங்குற பொண்ணுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. குடியா இப்ப 4 மாசம் கர்ப்பிணியா இருக்காங்க.கல்யாணத்த மிகப் பிரமாண்டமா நடத்தி முடிச்ச குடியாவோட பெற்றோர், மாப்பிளைக்கு நகை, பணம், ஒரு பைக், வீட்டு உபயோகப் பொருள்ன்னு எல்லாமே வாங்கி கொடுத்துருக்காங்க. கல்யாணமான கொஞ்ச நாட்கள் மட்டும் கணவன் வீட்ல மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருந்தாங்க குடியா. ஆனா அதுக்கப்புறம் மாமியார், வரதட்சனை கேட்டு குடியாவ டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ஏரியாவுல நிறைய பேரோட வீட்ல கார் இருக்கு, அதனால என் மகனுக்கும் உங்க அப்பா கிட்ட கேட்டு கார் வாங்கி கொடுக்கச் சொல்லு, அதே மாதிரி நீங்க போட்ட நகையெல்லாம் பத்தாது, இன்னும் கொஞ்சம் தங்க நகைகள வாங்கிட்டு வான்னு சொல்லிருக்காங்க. இத கேட்ட குடியா, எங்க அப்பா, அம்மா ஒன்னும், வசதியானவங்க கிடையாது, நாங்களும் ரொம்ப கஷ்டப்பட்டவங்க, சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ்ன்னு எல்லார் கிட்டயும் கடன் வாங்கி தான், இந்த கல்யாணத்தையே எங்க வீட்ல பண்ணி வச்சாங்க, அதனால என்னால நீங்க கேட்ட எதையும் வாங்கிட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.இதகேட்டு கோபமான மாமியார், தன்னோட மருமகள போட்டு கொடூரமா அடிச்சுருக்காங்க. அதே மாதிரி இந்த விஷயத்த தன்னோட மகன் பங்கஜ் தாகூர் கிட்டயும் சொல்லிருக்காங்க. அதுமட்டும் இல்லாம உன் மனைவி எந்நேரமும் ஃபோன தான் யூஸ் பண்ணிட்டு இருக்கான்னு ஏத்தி விட்ருக்காங்க. இதனால கணவன் மனைவிக்கு இடையில பிரச்னை ஏற்பட்ருக்கு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பிருக்காரு பங்கஜ் தாகூர். அப்ப மனைவி யார் கூடவோ ஃபோன் பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து சந்தேகப்பட்ட கணவன், இந்த நேரத்துல யார் கூட பேசிட்டு இருக்க, யார் கூடயாவது தொடர்புல இருக்கியான்னு கேட்டு சண்டை போட்ருக்காரு. அந்த நேரத்துல மாமியாரும் தன்னோட மருமகள் நடத்தையில சந்தேகப்பட்டு அடிச் சுருக்காங்க.சம்பத்தன்னைக்கு வரதட்சணை கேட்டு மறுபடியும் குடியா கிட்ட அவரோட கணவரும், மாமியாரும் பிரச்னை பண்ணிருக்காங்க. அப்ப குடியாவும் பதிலுக்கு ரெண்டு பேரையும் எதிர்த்து பேசிருக்காங்க. இதனால கொலை வெறியான தாயும், மகனும் குடியாவ போட்டு கண்மூடித்தனமா தாக்கிருக்காங்க. கிடைச்ச பொருட்களை எல்லாம் எடுத்து சரமாரியா தாக்கிருக்காங்க. இதுல தலையில பலத்த காயமடைஞ்ச குடியா சம்பவ இடத்துலையே துடிதுடிக்க உயிரிழந்துட்டாங்க. தரையிலையும், சுவற்றிலையும் ரத்தம் தெறிச்சுருக்கு. அடுத்து சடலத்த என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்த ரெண்டு பேரும், நைட்டு நேரத்துல வீட்டுக்கு பின்னாடி உள்ள வயல் வெளிக்கு எடுத்துட்டு போய்ட்டு, மரக்கட்டைகள குவிச்சு வச்சு எரிச்சுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், முதல்ல கணவன் பங்கஜ் தாகூர்ர அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்காங்க.