news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு - உதயநிதி கண்டனம்
tv

Also Watch

tv

Read this

விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு - உதயநிதி கண்டனம்

பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தனர். ஆனால், தற்போது, 50,000 ரூபாய் வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று கூறி உள்ளனர்.

நம்பிக்கை மோசடி
இது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கெனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று கூறிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தனர். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கின்றனர்.

தயாராக இருக்க வேண்டுமா?
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டுமா CM saar?
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

Related Link
தொடர் அதிர்ச்சியில் அதிமுக, அடுத்து என்னவோ? ஸ்ட்ராங் ஆகிறதா விசில்?

தொடர் அதிர்ச்சியில் அதிமுக, அடுத்து என்னவோ? ஸ்ட்ராங் ஆகிறதா விசில்?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

10
52 mins agoshare
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved