தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறியதால், தம்மை எரித்து கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தன்னை கொல்ல சதி நடந்ததாக தற்போது புகார் கூறியுள்ளார்.