வருண் சக்கரவர்த்திதான் தொடர்நாயகன் விருதுக்கு தகுதியானவர் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த தொடரில் முதல் 2 லீக் ஆட்டங்களில் விளையாடாத வருண் சக்கரவர்த்தி மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என தெரிவித்தார். மேலும் லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என கூறியுள்ளார்.