news-tamil-logo

3/18/2026, 4:26:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சிவப்பு நிற சூட்கேஸில் இருந்தது என்ன?
tv

Also Watch

tv

Read this

சிவப்பு நிற சூட்கேஸில் இருந்தது என்ன?

டெஹ்ரி, பீகார்

Posted on: Feb 04, 2026 11:45 AM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாலையோரத்தில் மர்மமான முறையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ். சூட்கேஸை திறந்து பார்த்ததும் அலறியடித்து ஓடிய பொதுமக்கள். சூட்கேசுக்குள் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, அழுகிய நிலையில கிடந்த இளம்பெண்ணின் சடலம். போலீசாரின் விசாரணையில கிடைத்த திடுக்கிடும் தகவல்கள். உயிரிழந்த இளம்பெண் யார்? கொலையாளிகள் சிக்கினார்களா? நடந்தது என்ன?

மர்மமான முறையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ்
டெஹ்ரி பகுதியில உள்ள குப்பை போடுற இடத்துல ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கிடந்துருக்கு. இதபாத்த பொதுமக்கள் யாரு இந்த சூட்கேஸ இங்க போட்டது, அதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க அத தொறந்து பாத்துருக்காங்க. அதுல ப்ளாஸ்டிக் கவரால சுற்றப்பட்ட நிலையில ஒரு இளம்பெண்ணோட உடல், அழுகுன நிலையில கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச பொதுமக்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் கொலை நடந்த இடத்துல பார்வையிட்டாங்க. அடுத்து உயிரிழந்த இளம்பெண் யாருன்னு தெரிஞ்சுக்க தீவிர விசாரணையில இறங்குனாங்க. முதல்ல அந்த சடலத்த புகைப்படம் எடுத்த போலீஸ், அத சுற்றுவட்டார பகுதியில உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பி வச்சு 25 வயசு மதிக்கத்தக்க இளம்பெண்ணின் மிஸ்ஸிங் கேஸ் எதுவும் ஃபைல் ஆகிருக்கான்னு பாக்க சொல்லிருக்காங்க. அதவச்சு விசாரிச்சதுல உயிரிழந்த இளம்பெண் டெஹ்ரி பகுதிய சேந்த மெகரூன்னு தெரியவந்துச்சு. அதுக்கப்புறம் இந்த தகவல பெண்ணோட பெற்றோர் கிட்ட சொன்ன போலீசார், அவங்க கிட்ட தீவிர விசாரணையில இறங்குனாங்க. உங்க மகள யாரு கொலை செஞ்சா? குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்னை ஏற்பட்டிச்சான்னு? கேட்ருக்காங்க. அப்ப அவங்க சொன்ன பதில் தான் இந்த வழக்கையே திருப்பி போட்டுருக்கு.

கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு
பீகார்ல உள்ள டெஹ்ரி பகுதிய சேந்த கயாமுதீனும், ரோஹ்தாஸ் பகுதிய சேந்த மெகரூன்னும் உயிருக்கு உயிரா காதலிச்சி, 2022ஆம் வருஷத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த தம்பதிக்கு இரண்டரை வயசுல ஒரு குழந்தை இருக்கு. கல்யாணமான புதுசுல இந்த தம்பதி மகிழ்ச்சியா தான் வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஆனா, நாள் போக போக இவங்களுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. எந்நேரமும் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே இருந்துருக்காங்க. இதனால மெகரூன், நிம்மதி இல்லாம கணவனோட வீட்ல வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க.

கணவனிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்த மனைவி
இதுக்கிடையில, கயாமுதினுக்கும், அவங்க சொந்தக்காரர் பெண் ஒருத்தருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. இந்த பழக்கமே அவங்களுக்குள்ள தகாத உறவாவும் மாறிருக்கு. அதுக்கப்புறம் வீட்டுக்கு போறதையே குறைச்சுக்கிட்ட கயாமுதின், எந்நேரமும் அந்த இளம்பெண்ணோட வீடே கதின்னு கிடந்துருக்காரு. இதனால கணவன், மனைவிக்கு இடையில பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, எதுக்கு இன்னொருத்தி கூட பழகிட்டு இருக்கிங்க, அவளவிட நான் எந்த விதத்துல கொறஞ்சிட்டேன், நமக்கு குழந்தை இருக்கு, இந்த மாதிரி நீங்க பண்ணிட்டு இருந்திங்கன்னா நம்ம குழந்தையோட எதிர்காலமே வீணாய் போய்ரும்ன்னு சொல்லிருக்காங்க. அதுக்கு கணவன், இப்பல்லாம் உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல, அதனால இனிமே என்னோட லைப்ல நீ தலையிடாதன்னு சொல்லி மனைவிய அடிச்சுருக்காரு.

கயாமுதீன் உள்ளிட்டோரை கைது செய்த போலீஸ்
கணவனோட டார்ச்சர பொறுத்துக்கிட்ட மனைவி அவரோட தகாத உறவுக்கு இடையூறாவே இருந்துருக்காங்க. இதனால கயாமுதீன், தன்னோட மனைவிய கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு மறுபடியும் கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்த கயாமுதீன், அவங்கள சரமாரியா குத்தியும், கழுத்த நெரிச்சும் கொடூரமாக கொன்னுருக்காரு. அடுத்து குடும்பத்தினர் ஒருசிலரின் உதவியோட சடலத்த ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல வச்சு, அத சூட்கேஸ்ல அடைச்சு பைக்ல கொண்டு போய்ட்டு சாலையோரத்துல தூக்கி வீசிட்டாரு. அதுக்கடுத்து இளம்பெண்ணோட வீட்டுக்கு ஃபோன் பண்ண கயாமுதீன், உங்க மகள் என் கூட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு ஓடிப்போய்ட்டான்னு சொல்லி நாடகமாடிருக்காரு. ஆனா, விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் கயாமுதீன் உள்ளிட்டோர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்

இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
0 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved