news-tamil-logo

3/22/2026, 2:26:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும்?
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும்?

பாலிவுட்டில் நுழையும் 'ஸ்டார்’ பட நடிகை

Posted on: Jan 31, 2026 11:31 AM

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும்?

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளிவந்திருக்க வேண்டும். இப்படத்தை திரையரங்கில் கொண்டாட விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் தனி நீதிபதி அமர்வு, படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால், மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. தலைமை நீதிபதி அமர்வில் இதற்கான விசாரணை நடந்தது. இதன்பின் கடந்த 27ஆம் தேதி வெளிவந்த உத்தரவில், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்காக அவகாசமும் வழங்கப்பட்டது. மேலும், ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய்விட்டது.

படையப்பா 2 Update

கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படையப்பா படத்தை, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தார்கள். கதை செம மாஸ் என்றால் பாடல்கள் அதையும் விட செம பக்கா மாஸாக அமைந்தது. இதனால் படம், பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. கடந்த வருடம் ரஜினியின் 75ஆவது பிறத்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் ஆகி இருந்தது. ரீ-ரிலீஸ் ஆன போது ரஜினி இத்தனை வருடங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது இந்த கதையை எழுதியது ரஜினிகாந்த் தானாம், தற்போது அவர் 2ஆம் பாகத்திற்கான கதையை கூட தயாராக்கி விட்டாராம். அந்த கதையும் சூப்பராக வந்துள்ளது, ஆனால் யார் அந்த கதையை இயக்குவார், எப்போது உருவாகும் என எதுவும் இப்போதைக்கு உறுதியாகவில்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

லோகேஷ் - அல்லு அர்ஜுன் படத்தின் கதாநாயகி

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, கைதி 2 டேக்ஆஃப் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் நடிப்பில் DC படம் உருவாகிறது என்றாலும், அவர் இயக்கத்தில் வரப்போகும் அடுத்த படம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், அல்லு அர்ஜுன் - லோகேஷ் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் அறிவித்திருந்தனர். அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக வந்துள்ள அறிவிப்பு அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படத்தின் ஹீரோயின் யார் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யோசிக்காமல் ஓகே சொன்ன ஒரே படம்

சசிகுமார், சிம்ரன் நடித்து வெற்றிபெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இவர், தற்போது 'வித் லவ்' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மதன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் புரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு நேர்காணலில் பேசிய அனஸ்வரா ராஜன். சில சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “என் திரை வாழ்க்கையில், கதை கேட்ட முதல் நாளிலேயே, எதைப் பற்றியும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே திரைப்படம் 'வித் லவ்' மட்டும் தான். நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன், இது ஒரு நல்ல காதல் படம். நாங்கள் படத்தை 'காதலுடன்’ உருவாக்கியுள்ளோம், அதை 'காதலுடன்’ வழங்குகிறோம்” என்று கூறி உள்ளார்.

பாலிவுட்டில் நுழையும் 'ஸ்டார்’ பட நடிகை

’ஸ்டார்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை பிரீத்தி முகுந்தன் .சமீபத்தில் கூட மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சர்வம் மாயா' படத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்திருந்தார். 2k கிட்ஸ்க்கு நேஷனல் crushaaga இருக்கும் இவர், தற்போது,Bollywoodல் கால் பதிக்க உள்ளாராம். நடிகர் கார்த்திக் ஆர்யன் கையில் 'நாக்ஜில்லா', மற்றும் கபீர் கான் இயக்கும் இன்னொரு படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களில் ஒன்றில் பிரீத்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர்-2 படப்பிடிப்பு நிறைவு

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி, ஹிட்டானது. இந்த வெற்றியை தொடர்ந்து ஜெயிலர்-2 படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆம், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடந்து ஜூன் மாதம் இப்படம் வெளிவரவிருக்கிறது. கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ரஜினி-173. ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. அதற்கான புரோமோ வீடியோ விரைவில் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Link
வெள்ளி விலையில் ரூ.85 ஆயிரம் குறைவு

வெள்ளி விலையில் ரூ.85 ஆயிரம் குறைவு

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved