news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கால்வாயில் மனைவி சடலம், சைக்கோவாக மாறிய கணவன்
tv

Also Watch

tv

Read this

கால்வாயில் மனைவி சடலம், சைக்கோவாக மாறிய கணவன்

கான்பூர், உத்தர பிரதேசம்

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

துணியால் சுற்றப்பட்ட நிலையில் கால்வாயில் கிடந்த பெண் சடலம். இறந்து கிடந்த பெண் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீஸ். காவல்துறைக்கு துருப்புச்சீட்டாக கிடைத்த தோடு. பெண்ணை கொடூரமாக கொலை செய்து கல்லைக் கட்டி கால்வாயில் வீசியது யார்? கொடூரச் சம்பவத்தின் பின்னணி என்ன?

* ரோட்டோர கால்வாயில் பெண் சடலம்
* முகம் சிதைந்து கொடூரமாக கிடந்த சடலம்
* பெண்ணை கொ*று கால்வாயில் வீசியது யார்?


ரோட்டோரத்துல உள்ள ஒரு கால்வாய்ல, பெண் சடலம் ஒண்ணு கிடக்குறதா போலீஸுக்கு தகவல் வந்துருக்கு. அதுக்கப்புறம், சம்பவ இடத்துக்குப்போய் பாத்தப்ப, துணியால சுத்திவச்சி, ஒரு பெண் சடலம் கிடந்துச்சு. அந்த பொண்ண யாரோ கொடூரமா கொன்னு, சடலத்த துணியால சுத்தி, கல்ல கட்டி கால்வாய்ல வீசியிருந்துருக்காங்க. முகம் அடையாளமே தெரியாத அளவுக்கு சிதஞ்சு போய் இருந்ததால, அந்த பெண் யாருங்குறத கண்டுபிடிக்க முடியாம போலீஸ் திணறிட்டு இருந்தாங்க.

* துப்பு கிடைக்காமல் திணறிய காவல்துறையினர்
* பெண்ணின் சடலத்தில் இருந்த தோடு
* போலீஸுக்கு துருப்புச்சீட்டாக கிடைத்த தோடு


அந்த பெண் உடல்ல யார் பேரையாவது பச்ச குத்தியிருக்காங்களான்னு பாத்தா, அதுவும் இல்ல. கால்வாய்ல இருந்து சடலத்த மீட்ட நாள்ல இருந்து அதுக்கு முன்னாடி ஒரு வாரம் வரைக்கும், அந்த இடத்துல பதிவான செல்போன் சிக்னல்கள வச்சு விசாரிச்சப்பவும் போலீஸுக்கும் எந்த க்ளூவும் கிடைக்கல. அதுக்குப்பிறகு சடலத்த போஸ்ட் மார்டம் பண்ணப்ப, அந்த பொண்ணுட்ட இருந்த ஒரு சைடு கம்மல டாக்டர்கள் பாத்து, போலீஸ்கிட்ட கொடுத்திருக்காங்க. இந்த கேஸ்ல அந்த கம்மல் தான் போலீஸுக்கு துருப்புச்சீட்டா அமைஞ்சிருக்கு.

Related Link

"குடும்ப கவுரவத்துக்காக இப்படி பண்ணேன்"

* ஹால்மார்க் முத்திரையை வைத்து விசாரித்த போலீஸ்
* தோடை வாங்கியவரின் விவரத்தை சேகரித்த போலீஸ்
* நிதினை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை

அந்த கம்மல இருந்த ஹால்மார்க் முத்திரைய வச்சு, அது, கான்பூர்ல உள்ள ஒரு நகைக்கடையில இருந்து வாங்குனதுங்குற போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம், நேரா அந்த நகைக்கடைக்கு போய், இந்த கம்மல காட்டி விசாரிச்சப்ப, உத்தரபிரதேசத்துல உள்ள பங்கி பகுதிய சேர்ந்த நிதின்-ங்குறவரு வாங்கியிருக்குறது தெரிஞ்சிருக்கு. நகையோட பில்லுல இருந்த நிதினோட அட்ரஸுக்கு போய் பாத்தப்ப, வீடு பூட்டியிருந்துக்கு. அதனால, பில்லுல இருந்த செல்போன் நம்பருக்கு போலீஸ் கால் பண்ணி பாத்தப்ப, நிதின் ஃபோன அட்டண்ட் பண்ணி, தான் வெளியூர்ல இருக்குறதா சொல்லியிருக்காரு. உங்க மனைவி எங்கன்னு கேட்டப்ப, அவங்க ராஜஸ்தான் டூர் போய்ருக்காங்க, வர பத்து நாளைக்கு மேலாகும்னு சொல்லியிருக்காரு. நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு சொல்லியிருக்காரு.

* காதல் திருமணம் செய்து கொண்ட நிதின் - சவிதா
* நிதின் - சவிதா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்


கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க மனைவிக்கு ஒரு கம்மல் வாங்கிக் கொடுத்தீங்களான்னு கேட்டதுக்கு, கம்மல் மட்டுமில்ல, நான் நிறைய நகை வாங்கிக் கொடுத்திருக்கேன், அதெல்லாம் எதுக்கு நீங்க கேக்குறீங்கன்னு கோவமா பேசிட்டு ஃபோன கட் பண்ணியிருக்காரு. நிதின் ஏதோ ஒரு தடுமாற்றத்தோட பேசுறத கவனிச்ச போலீஸுக்கு அவர் மேல சந்தேகம் அதிகமாகியிருக்கு. அதனால, கான்பூர்ல உள்ள அவரோட வீட்டுகிட்ட போலீஸ் போனப்ப, நிதின் வீட்டுலதான் இருந்துருக்காரு. அதுக்குப்பிறகு அவர ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போய் விசாரிச்சப்ப ன் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துச்சு. பங்கி-ங்குற பகுதிய சேர்ந்த நிதினும், சவிதாவும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த தம்பதிக்கு மூணு வயசுல உத்கர்ஷ்-ங்குற மகனும், ஒரு வயசுல மான்வி-ங்குற மகளும் இருக்காங்க.

* வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த நிதின்
* மனைவி கழுத்தை நெரித்து கொ* செய்த பயங்கரம்
* நிதினை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்


கல்யாணமாகி அஞ்சு வருஷத்துக்கு மேலாகியும் நிதின், மனைவி சவிதாகிட்ட வரதட்சணை கேட்டு டார்ச்சர் பண்ணிருக்கான். அதனால, கணவன் - மனைவி ரெண்டு பேத்துக்கும் இடையில கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்குது. தினமும் மனைவிய அடிச்சு சித்ரவதை பண்ண நிதின், சம்பவத்தனைக்கு அவங்க கழுத்த நெரிச்சு கொடூரமான முறையில கொன்னுருக்கான். அதுக்குப்பிறகு, சடலத்த 3 கிலோ மீட்டர் தூரத்துல உள்ள கால்வாயில வீசிட்டு அங்க இருந்து தப்பிச்சு போயிருக்கான். விசாரணையில, நிதின் மொத்த உண்மையையும் ஒன்னுவிடாம் சொல்லவே, அவன் மேல கொலை வழக்குப்பதிவு பண்ணி தொடர்ந்து விசாரிச்சிட்டு இருக்காங்க போலீஸ்.

Related Link
தகாத உறவில் இருந்த மனைவி..நடுரோட்டில் காதலன் சுட்டுக் கொ*ல..!

தகாத உறவில் இருந்த மனைவி..நடுரோட்டில் காதலன் சுட்டுக் கொ*ல..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

4
9 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved