பீகார் மாநிலத்தில், ஒருபோதும் காட்டாட்சி திரும்ப வராது எனவும், அதற்கு மக்கள் ’நோ என்ட்ரி’ போட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல் வெற்றி கொண்டாட்ட விழாவில் உரையாற்றிய அவர், மகாகத்பந்தன் கூட்டணி மீது கடும் விமர்சனங்களை வைத்தார். மேலும், பீகாரை போலவே மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் என்றும், மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் தேர்தல் வழி வகுத்துள்ளதாகவும், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து;பீகார் மாநில தேர்தல் முடிவுகள், உண்மையிலேயே ஆச்சரியம் அளிப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் தங்களால் வெற்றிபெற முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார். இது ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் பாதுகாப்பதற்கான யுத்தம் எனத் தெரிவித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் வலுவாக செயலாற்றுவோம் என்றும் ராகுங்காந்தி உறுதியளித்துள்ளார்.இதையும் பாருங்கள் - Bihar | Maithili Thakur | 25 வயதில் MLA கன்னி தேர்தலில் வெற்றி போஜ்புரி பாடகி to இளம் அரசியல்வாதி