Also Watch
Read this
என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா? என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்து உள்ளார்.

நாங்கள் எதுவும் கூறவில்லை
இதுகுறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது; தவெக தலைவர் விஜய் உடனான கூட்டணியை பொறுத்த வரைக்கும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக சொல்லி விட்டார். யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி அண்ணன் சொன்னதுடன் முடிந்து விட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

தவெக ஆன்-லைன் கூட்டம்
தவெக ஆன்லைன் மீட்டிங் நடத்தியது பற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் வேட்பாளர் அவர் தான். அவருடையே கருத்தே இறுதியாக நாங்கள் பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 51 தொகுதிகள் என்பதெல்லாம் உண்மை இல்லை. இந்த கூட்டணியை வழிநடத்தும் இபிஎஸ் அண்ணன் கருத்து தான் இறுதி. அதிக இடங்களில் அதிமுக நிற்க போகிறது. அப்படி இருக்கும்போது அவருடைய முடிவு தான், அனைவரின் முடிவாக நான் பார்க்கிறேன்.

இபிஎஸ் முடிவு எடுப்பார்
அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொன்னது தான் முடிவு. இதன் பிறகு ஏதாவது மாற்றம் இருந்தால் அவரே அறிவிப்பார். இதில் நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. இந்த தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved