யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர். உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவு. பல ஆசைகளோடும் கனவுகளோடும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை. திருமணமான 40 நாட்களிலேயே இளைஞர் உயிரை மாய்த்து கொண்டது ஏன்? இளைஞர் கடிதத்தில் எழுதி வைத்திருந்தது என்ன?அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற பெற்றோர்பக்கத்துல உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு போன பெற்றோர், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வந்திருக்காங்க. வீட்டுல மகன் இருப்பான்னு நினச்சு, வீட்டுக்கிட்ட வந்ததுமே ஹரீஷ் ஹரீஷ்ன்னு கூப்டிட்டே வந்திருக்காங்க. வழக்கமா ஒரு முறை கூப்டதுமே வாசலுக்கு ஓடி வர்ற ஹரீஷ், நாலஞ்சு முறை கூப்ட்டும் பதிலே சொல்லாததால, பெற்றோருக்கு சந்தேகம் வந்திருக்கு. உடனே பக்கத்து வீட்டுக்கு போய், எங்க மகன், எவ்வளவு கூப்டும் கதவ தொறக்க மாட்டேங்குறான் சொல்லியிருக்காங்க. உடனே அக்கம்பக்கத்துல உள்ளவங்களும் வந்து கூப்டு பாத்திருக்காங்க. அப்பவும் கதவ தொறக்கல. ரொம்ப நேரமாகியும் வீட்டுக்குள்ள இருந்து எந்த சத்தமும் வராததால சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்து மக்கள், உடனே கதவ உடச்சு உள்ள போய் பாத்தா, ஹரீஷ் தூக்குல சடலமா தொங்கிட்டு இருந்துருக்காரு.வீட்டில் இருந்து லெட்டரை கைப்பற்றிய போலீஸ்தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், ஹரீஷோட சடலத்த கைப்பற்றி, போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. ஹரீஷ் எதுக்கு தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு போலீஸ் விசாரிச்சிட்டு இருக்கும்போதே, அவங்க கண்ணுல ஒரு லெட்டர் தென்பட்டிருக்குது. அந்த லெட்டர எடுத்து படிச்சதுக்கு அப்புறம்தான், ஹரீஷோட மரணத்துக்கு பின்னால இருக்குற விஷயமே தெரியவந்துருக்குது.திருமணத்திற்கு முன் குமாரை காதலித்த சரஸ்வதிகர்நாடக மாநிலம், தாவணகெரே கும்மனூர் கிராமத்த சேர்ந்த 32 வயசான ஹரீஷுக்கும், 22 வயசான சரஸ்வதிக்கும் ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. சொந்தபந்தங்கள் எல்லாரும் சேந்துதான் இந்த கல்யாணத்த நடத்தி வச்சிருக்காங்க. டிரான்ஸ்போர்ட் கம்பெனி வச்சு நடத்திட்டு இருந்த ஹரீஷ், வசதியான குடும்பத்த சேர்ந்தவர். சரஸ்வதியும், குமார்-ங்குறவரும் கடந்த நாலு வருஷமாவே காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. ஆனா, இந்த காதலுக்கு சரஸ்வதியோட வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சதா சொல்லப்படுது.ஹரீஷ் வசதியானவர் என்பதால் திருமணத்திற்கு சம்மதம் வீட்டுல என்ன தான் எதிர்ப்பு தெரிவிச்சாலும் சரஸ்வதி தன்னோட காதல்ல ஸ்ட்ராங்கா தான் இருந்துருக்காங்க. ஆனாலும், வீட்டுல பாத்த மாப்பிள்ளையான ஹரீஷ் கல்யாணம் பண்றதுக்கு ஓகே சொல்லியிருக்காங்க. அதுக்கு காரணம், ஹரீஷ்கிட்ட இருக்குற பணம். வீட்டுல பாத்துருக்குற மாப்பிள்ளை ரொம்ப வசதியான ஆளு, அவர கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு பணம் காசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது, கல்யாணத்துக்கு அப்புறமும் நாம இதே மாதிரி பேசிப்பழகி ஜாலியா இருக்கலாம், அடிக்கடி தனிமையில சந்திச்சிக்கலாம்னு காதலன் குமார் கிட்ட சொல்லியிருக்காங்க சரஸ்வதி. இந்த ஐடியாவுக்கு குமாருக்கும் சரின்னு சொல்லிருக்கான்."திருமணத்திற்கு பிறகும் இதேபோல் காதலை தொடரலாம்"கல்யாணத்துக்கு அப்புறம், வழக்கம்போல நம்ம காதலன் குமார் கூட சந்தோஷமா இருக்கலாம், அதுவும் கணவனோட காசுலேயே ஜாலியா இருக்கலாம்னு நினச்சு பிளான் போட்ட சரஸ்வதியோட திட்டம் எல்லாம் சுக்குநூறாப் போயிருக்கு. ஏன்னா, கல்யாணம் முடிஞ்ச சில நாட்களிலேயே ஹரீஷுக்கு, சரஸ்வதி பத்துன விஷயம் தெரிஞ்சிருச்சு. அதுக்கப்புறம், இத்தன நாள் போனது போகட்டும், இப்ப நமக்கு கல்யாணமாகிருச்சு, நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, அத வாழ்வோம், காதல விட்டுரு, குமார் கூட பேசுறத விட்டுருன்னு அட்வைஸ் பண்ணிருக்காரு ஹரீஷ். ஆனா, கணவனோட அட்வைஸ இடது காதுல வாங்கி வலது காது வழியா வெளிய விடுறமாதிரி எதையும் கண்டுக்காம, வழக்கம்போல தன்னோட காதலன் குமார் கிட்ட பேசி பழகிட்டு இருந்துருக்காங்க. இதுனால, ஹரீஷ்-சரஸ்வதிக்கு இடையில அடிக்கடி பிரச்சினை வந்திருக்கு. சரஸ்வதிய, குமார்கிட்ட பேச விடாம தடுத்திருக்காரு ஹரீஷ்.காதலன் குமாருடன் ஓட்டம் பிடித்த சரஸ்வதிகல்யாணத்துக்கு அப்புறமும் குமார்கூட ஜாலியா லவ் பண்ணிட்டு இருக்கலாம்னு பாத்தா, ஹரீஷ் இப்படி பண்றாரேன்னு ரொம்ப கடுப்பாகியிருக்காங்க சரஸ்வதி. ஒருகட்டத்துல வீட்டைவிட்டு வெளியேறி காதலன் குமார்கூட போயிட்டாங்க. கல்யாணமான 40வது நாள்லே தன்னோட மனைவி முன்னாள் காதலனோட ஓடி போனத நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளான ஹரீஷ், வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்துருக்காரு. இந்த சூழல, சம்பவத்தன்னைக்கு அவரோட அப்பா, அம்மா பக்கத்துல உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருக்காங்க.குமாருடன் மனைவி சென்றதால் விரக்தியான ஹரீஷ்அப்ப வீட்டுல தனியா இருந்த ஹரீஷ் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாரு. உயிர விட்றதுக்கு முன்னாடி, தன்னோட தற்கொலைக்கு மனைவி சரஸ்வதியும், மகளோட காதல் விவகாரத்த சொல்லாம அத மறைச்சு கல்யாணம் பண்ணி வச்ச மாமனார், மாமியார், சரஸ்வதியோட காதலன் குமாரும்தான் காரணம்னு தன் கையால லெட்டர எழுதி வச்சிட்டு உயிர விட்டுருக்காரு ஹரீஷ். அந்த கடிதத்த கைப்பற்றி வழக்குப்பதிவு பண்ண போலீஸ், சரஸ்வதியையும், அவங்க பெற்றோர், காதலன் குமார் கிட்டையும் தொடர்ந்து விசாரணை பண்ணிட்டு இருக்காங்க. Related Link மதுவுக்கு அடிமையான கணவனால் சீரழிந்த குடும்பம்