சென்னையில உள்ள ஒரு பிரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு 27 வயசான இளைஞர் துரைராஜ். கடலூர் பண்ருட்டி பக்கத்துல உள்ள சிறு தொண்டமாதேவி பகுதியை சேர்ந்த இந்த இளைஞருக்கு தன்கூட வேலை பாத்த 27 வயசான இளம்பெண் மேல காதல் வந்துருக்குது.. விழுப்புரம் திண்டிவனத்தை சேர்ந்த அந்த பொண்ணுக்கிட்ட துரை ராஜ் புரோபஸ் பண்ணிருக்காரு.. ஆனா, அந்த பொண்ணு காதலை ஏத்துக்கல.. துரை ராஜூம் அந்த பொண்ணும் வெவ்வேறு சமூகம் அப்டிங்குறதாலதான் காதலை ஏத்துக்கல.. இருந்தாலும் விடாம விரட்டி விரட்டி காதலிச்சிருக்காரு .. ஒருகட்டத்துல, ரெண்டுபேரும் வெவ்வேறு சமூகம் கண்டிப்பா நம்ம பெற்றோர் காதலை ஏத்துக்கமாட்டாங்கனு சொன்ன அந்த பொண்ணு, கல்யாணம்னு வர்றப்ப பெரிய பிரச்சனையாகும்னு சொல்லிருக்காங்க.. அதுக்கு, யார் எதிர்த்தாலும் நான் கண்டிப்பா உன்னைய கைவிடமாட்டேனு சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் பண்ணி வாக்குறுதி குடுத்துருக்காரு துரை ராஜ்.இளைஞன் தன்னோட காதல்ல உறுதியா இருந்ததால மனசு இறங்குன அந்த இளம்பெண்ணும் பச்சைக்கொடி காட்டிருக்காங்க.. அடுத்து ரெண்டுபேரும் சேர்ந்து பல இடங்களுக்கு வெளிய போறது, கோவிலுக்கு போறது, சினிமா போறதுனு காதலை வளத்துருக்காங்க.. இதுக்குமத்தியில இளம்பெண் வீட்ல கல்யாண பேச்சை எடுத்துருக்காங்க.. அப்போ, தான் துரைராஜை காதலிப்பதாகவும், அவரைதான் கல்யாணம் பண்ணிக்குவேனும் சொல்லிருக்காங்க .. மகளோட ஆசைய புரிஞ்சிக்கிட்ட பெற்றோர் சமூகத்த பார்க்காம அவங்க சந்தோஷமா இருந்தா போதும்னு நினைச்சி கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிருக்காங்க.. தன்னோட பெற்றோர்கள் எந்த பிரச்சனையும் பண்ணாம கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கனு நினைச்சி பாக்காத இளம்பெண், அந்த விஷயத்தை துரை ராஜ்கிட்ட சந்தோஷமா சொன்னதோட உங்க வீட்லயும் பேசிரு சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காங்க.அதுக்குப்பிறகு, துரைராஜ் தன்னோட அப்பா, அம்மாக்கிட்ட விஷயத்தை சொல்லிருக்காரு.. அதக்கேட்டு டென்ஷன் ஆன இளைஞரோட பெற்றோர் உன் அண்ணனுக்கு பொண்ணு பாத்திருக்கோம், அவனோட கல்யாணம் முடியட்டும், அதுக்குப்பிறகுதான் உன் கல்யாணம்னு சொன்னதோட காதலிக்கிற பொண்ணு நம்ம சமூகம் இல்லனா காதல் கத்தரிக்காயை மறந்துரு, ஒருவேளை அந்த பொண்ணதான் கல்யாணம் பண்ணுவேனு சொன்னா உனக்கு சொத்து கிடையாது, எல்லா சொத்துமே அண்ணனுக்குதான், நீ வீட்டுப்பக்கமே வராதனு உறுதியா சொல்லிருக்காங்க.. தன் பெற்றோர்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத இளைஞன், இளம்பெண்கிட்டயும் விஷயத்தை சொல்லிருக்காரு. அதோட, என் அண்ணனுக்கு மேரேஜ் முடியட்டும், நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காரு.. இதுக்குமத்தியில தன் அண்ணன் மேரேஜூக்காக சென்னையில இருந்து தன் சொந்த ஊருக்கு போயிருக்காரு துரை ராஜ்.. கல்யாணம் முடிஞ்சி மறுபடியும் சென்னை வந்தபிறகு காதலனோட நடவடிக்கைகள்ல நிறைய மாற்றத்த பாத்துருக்காங்க இளம்பெண்.. முகம் குடுத்து பேசாம, வீடியோ காலை அட்டெண்ட் பண்ணாம, மெசேஜ்களை பாத்தாலும் ரிப்ளை பண்ணாம இருந்துருக்காரு.. அதனால, வருத்தப்பட்ட இளம்பெண் காதலன்கிட்டயே காரணம் கேட்ருக்காங்க.. அதுக்கு, உப்புசப்பில்லாத காரணங்களை சொல்லி மழுப்பிருக்காரு இளைஞர்.. அதனால, சந்தேகமடைஞ்ச இளம்பெண் காதலனோட உறவுக்கார பொண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிருக்காங்க.. அதுக்கு, துரை ராஜோட அண்ணன் கல்யாணத்துக்கு வந்த ஒரு உறவுக்கார பொண்ணை அவங்க பெற்றோர் பேசி முடிச்சிருக்குறதாகவும், அந்த பொண்ணு கைநிறைய சம்பளம் வாங்குறதாகவும், அவங்களதான் துரை ராஜ் கல்யாணம் பண்ணிப்பாருனும் குண்டை தூக்கிப்போட்டதோட பேசி முடிச்ச பொண்ணோட போட்டோவையும் அனுப்பி வச்சிருக்காங்க.. அத பாத்து ஷாக் ஆன இளம்பெண், தன்னோட காதலன்கிட்ட நியாயம் கேட்ருக்காங்க.. அதுக்கு, சமூகத்த காரணங்காட்டி தன் பெற்றோர் காதலை ஏத்துக்கலனு சொன்ன துரை ராஜ் கல்யாணத்துக்கும் மறுப்பு சொல்லிருக்காரு..காதலிக்க ஆரம்பிக்கும்போதே நான் எத்தனைமுறை சொன்னேன் என கதறி அழுத இளம்பெண் எனக்கு ஒரு பதில் சொல்லுனு கேட்ருக்காங்க.. ஆனா, அத துரை ராஜ் காதுல வாங்குற மாதிரியே தெரியல.. காதலன்கிட்ட நியாயம் கேட்டு கேட்டு பார்த்து மனசு ஒடைஞ்ச அந்த பொண்ணு, இதுவரைக்கும் தன்கிட்ட வாங்கின ரூபாய் 5 லட்சத்தை திருப்பிக் குடுங்கனு கேட்ருக்காங்க.. அந்த பணத்தை திருப்பி குடுக்காத துரை ராஜ் இளம்பெண்ணை தகாத வார்த்தைகள்ல திட்டிருக்காரு.. அதுக்குப்பிறகு, வீடியோக்கள், ஆடியோக்கள், போட்டோக்கள், எஸ்எம்எஸ், கூகுள் பேனு அத்தனை ஆதாரங்களையும் குடுத்து காவல் நிலையத்துல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க இளம்பெண்.. அடுத்து, வழக்குப்பதிவு பண்ண ரோஷணை போலீசார் காதலன் துரை ராஜை கைது பண்ணி கம்பி எண்ண வச்சிருக்காங்க..இதையும் படியுங்கள் : ஒரே நேரத்தில் 2 இளைஞர்களுடன் பழக்கம்