Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 10:00 AM
By: Web Team

மேற்கு இந்திய தீவுகள் அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரஸல், ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக ரஸல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கேகேஆர் அணியில் பவர் கோச் என்ற பதவியில் தொடர்வதாகவும் மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாட விருப்பமில்லாததால் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாகவும் ரஸல் உருக்கமாக விடியோ வெளியிட்டுள்ளார். ஃபினிஷர் ரோலுக்கு பெயர்பெற்ற ஆண்ட்ரே ரஸலை, டிசம்பரில் நடைபெறும் மினி ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுக்க சிஎஸ்கே போன்ற அணிகள் காத்திருந்த வேளையில், அவரின் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved