2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணியிலிருந்து நீக்கியதற்கு பின், இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு தெரிவித்து வந்தது. ஐசிசி தரப்பிலிருந்து முறையான பதில் வராததால் இந்தியாவில் விளையாட வங்கதேசம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கொல்கத்தவில் நடைபெறும் போட்டிகளை சென்னையில் மாற்ற ஐசிசி-யிடம் வங்கதேச அணி வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு முதல் வெற்றி