பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 3-6 , 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.