சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வாலண்டைன் வசெரோட், 6-க்கு 3, 6-க்கு 4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக்கிடம் தோல்வி அடைந்தார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஆர்தர் ரிண்டர்நெக் - மொனாக்காவின் வாலண்டைன் வசரோட் மோதுகின்றனர்.