Also Watch
Read this
By: Manigandan Raja

வைபவ் சூரியவன்ஷி 52 ரன்கள் விளாசினார் :
ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 12 புள்ளி 1 ஓவர்களில் வெறும் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 38 ரன்கள் அடித்தார்.
தோல்வி குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் விளக்கம் :
தாங்கள் விளையாடும்போது பிட்ச் கடினமாக இருந்ததால் அதிக ரன்கள் அடிக்க முடியவில்லை என தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த தோல்வி தங்களுக்கு எரிச்சலை தரவில்லை எனவும், தோல்வியை அப்படியே நகர்த்தி வைத்துவிட்டு இங்கிருந்து நகர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
3 நாட்களில் அடுத்த போட்டி உள்ளதால், அதில் அனைவரும் நன்றாக விளையாட என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் எனவும், மனரீதியாக தாங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் எனவும் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடிவு :
தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், மீண்டும் களம் திரும்ப கடுமையாக உழைத்து வருவதாகவும் மேரி கோம் தெரிவித்துள்ளார்.
43 வயதான இந்தியாவின் மேரி கோம், பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.

தற்போது அவருக்கு வயதாகி விட்டதால் இனிமேல் தேசிய அணிக்காக அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து விட்டார். எனவே, தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு மாற முடிவு செய்துள்ளார்.
"தன்னுடையை 175 ரன்கள் சாதனையை வைபவ் முறியடிப்பார்" :
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை கண்டு ரசித்ததாகவும், தன்னுடையை அதிகபட்ச ஸ்கோரான 175-ஐ முறியடிக்கும் திறன் அவருக்கு உண்டு எனவும் கிறிஸ் கெயில் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved