news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சக்தி வாய்ந்த பதிலடி
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சக்தி வாய்ந்த பதிலடி

சக்தி வாய்ந்த பதிலடி

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காட்ஸ்

ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை 

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், சக்தி வாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமெரிக்கா தனது கொள்கையை மாற்றிக் கொண்டாலும், ஈரானுக்கு எதிரான தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இருவிதமான நடவடிக்கைகளுக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல, ஈரான் மீது உடனடியாக போரை மீண்டும் தொடங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் யாருக்கும் எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்படுவோம் எனவும் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஐயல் ஜமீர் தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு 

பெரு நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 300 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கு மற்றும் தென்மேற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கயானாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 66 பயணிகள் மாயம்

தென் அமெரிக்க நாடான கயானாவில், 86 ஆண்டுகள் பழமையான படகு கவிழ்ந்ததில் மாயமான 66 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. "எம்.வி. பரிமா" ((MV Barima)) என்ற படகு, தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து 116 பயணிகள் மற்றும் 17 பணியாளர்களுடன் போர்ட் கைடுமா நோக்கி சென்றது.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பொமரூன் நதிக்கு அருகே சென்றபோது, திடீரென ஏற்பட்ட பெரிய அலையில் சிக்கி படகு மூழ்கியது. இதில், 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் என 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 66 பேரை தேடும் பணியில் கடலோர காவல்படையினரும். தனியார் படகுகளின் உரிமையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Related Link
ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எஸ்கேப்?

ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எஸ்கேப்?

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாக்கை மடித்து செய்தியாளர்களிடம் அத்துமீறிய தூத்துக்குடி ADSP

3
9 hrs 52 mins agoshare
TUT ADSPbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau