Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 10:07 AM
By: Web Team

சீனாவில் மனிதர்களின் உதவியின்றி 106 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாமல் ட்ரெக்கிங் சென்று மனித உருவிலான ரோபோ உலக சாதனை படைத்துள்ளது. சீன பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட அகிபோட் A2 என்ற ரோபோ, மனித உதவியின்றி மூன்று நாட்களில் சுஜோவிலிருந்து ஷாங்காய் வரை நடைபயணம் மேற்கொண்டது. 5.74 அடி உயரமும் சுமார் 55 கிலோ எடையும் கொண்ட அகிபாட் A2, இறுதிக் கோட்டைக் கடந்த பிறகு, அதன் "இயந்திர வாழ்க்கையில் இந்த ட்ரெக்கிங் ஒரு மறக்கமுடியாத அனுபவம்" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாகவும், "ஒரு புதிய ஜோடி காலணிகள் தேவைப்படலாம்" என்றும் நகைச்சுவையாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved