Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் கீர் ஸ்டார்மர்
இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் இன்று பதவியேற்கிறார். நாட்டின் பொருளாதார தேக்க நிலை, பணவீக்கம், உதவித்தொகை ரத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஸ்டார்மரின் செல்வாக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் குறையத்தொடங்கியது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தார். பின்னர், தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், இங்கிலாந்து பிரதமராக இன்று பதவியேற்கிறார்.
சொந்த கட்சிக்குள் செல்வாக்கு சரிந்ததால் பதவியை ராஜினாமா

பிரிட்டனின் 6ஆவது பிரதமராக பதவி வகித்த கெய்ர் ஸ்டார்மர் ((Keir Starmer)) பக்கிங்காம் அரண்மனையில் இளவரசர் சார்லஸை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
உள்ளாட்சித் தேர்தல்களில் தொழிற்கட்சியின் மோசமான தோல்வி மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி தனது பிரதமர் பதவியை கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆண்டி புர்ன்ஹாம் (( Andy Burnham)) விரைவில் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
ஈரான் மிகப்பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது

அமெரிக்காவுடன் ஈரான் மிகப்பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமெரிக்காவுடனான இந்த மோதல் ராணுவத் தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டது எனவும், இது வெறும் ஏவுகணை போர் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ தாக்குதல்கள் மூலம் ஈரானை சரணடையச் செய்ய முடியாது என்ற முடிவுக்கு எதிரி நாட்டினர் வந்து விட்டதாகக் கூறிய அவர், எதிரிகளுடனான மோதலின் பிரதான களமாக பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரங்களும் மாறியுள்ளதாக கூறியுள்ளார். எதிரியின் சதித்திட்டங்களை எதிர்கொள்வதோடு, உள்நாட்டுப் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.