சவுதி அரேபியாவில் மற்றொரு விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தம்மாம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டதை சவுதி விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இங்கிலாந்தின் யார்க்ஷைர் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி
இங்கிலாந்தின் யார்க்ஷைர் வனவிலங்கு பூங்காவில் புலியை அடைத்திருந்த பகுதிக்குள் குதித்த நபர் புலி தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்ததும் பூங்கா ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளே சென்று அந்நபரை மீட்டு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.