news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்
tv

Also Watch

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்

கண்டனம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Saudi arebia

தாக்குதல்களில் 3 பேர் பலி, 36 பேர் காயம் - சவுதி அரசு

  • சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அபாவில் உள்ள விமான நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
  • ஏமன் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா - கோட் டிவார் நாடுகள் பேச்சுவார்த்தை

  • இந்தியாவும், மேற்கு ஆப்பிரிக்க நாடான கோட் டிவார் நாடும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பாக தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்துள்ளன.
  • மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோட் டிவார் நாட்டின் அபிட்ஜான் நகருக்குச் சென்றார். அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்த அவர், இராணுவப் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுப் பரிமாற்றங்களை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்.

ஸ்மித் மச்சார் உடல்நிலையில் முன்னேற்றம் - வெளியுறவுத்துறை

  • ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி விமானத்தில் துணை விமானியால் தாக்கப்பட்ட மச்சார், கடுமையான காயங்களையும் பொருட்படுத்தாமல் காக்பிட் கதவைத் திறக்க உதவினார்.
  • அபுதாபி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பெற்று வரும் அவர், தற்போது நன்றாக குணமடைந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Related Link
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved