லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவனும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவனுமான Saifullah Kasuri அந்த அமைப்புடன் பாகிஸ்தான் இராணுவத்திற்கு உள்ள நேரடித் தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றும்போது இராணுவத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளில் பங்கேற்க பாகிஸ்தான் இராணுவத்திடம் இருந்து தனக்குத் தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும், அதன் வீரர்களின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளை வழிநடத்தவும் தன்னை அழைப்பதாகவும் Saifullah Kasuri தெரிவித்தர்.இதையும் படியுங்கள் : மச்சாடோவால் டிரம்ப்பிற்கு அமைதிப் பரிசை வழங்க முடியாது