மச்சாடோவால், அதிபர் டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க முடியாது என நார்வே நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு தான் என டிரம்ப் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நோபல் நிறுவனம் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியது. பரிசு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்தப் பரிசை டிரம்ப்பிற்கு அர்ப்பணிப்பதாக மச்சாடோ கூறினார். அடுத்த வாரம் அதிபர் டிரம்பை சந்தித்து அமைதிப் பரிசு வழங்க மச்சாடோ திட்டமிட்டிருந்த நிலையில், பரிசை ரத்து செய்யவோ, மாற்றவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று நார்வே நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்