வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட விழாவில் அந்நாட்டின் புதிய போர்க்கப்பல் சேதமடைந்ததன் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு துறைமுகமான சோங்ஜினில் நடந்த விழாவில், 5 ஆயிரம் டன் எடையுள்ள புதிய போர்க் கப்பல், அதன் சாய்வுப் பாதையில் இருந்து விலகிச் சென்று, சமநிலையை இழந்தது. தற்போது அந்த கப்பல் மீது தார்பாய் கொண்டு மூடப்பட்டு சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.