Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச நீதிமன்றத்தால் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்டு
நியூயார்க்கிற்கு வரும் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை கைது செய்ய திட்டமென மேயர் மம்தானி தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தால் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கைது செய்வது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இடியுடன் கூடிய கனமழையால் வெள்ளம்

அமெரிக்காவில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடகிழக்கு பகுதி முழுவதும் தத்தளித்தது. நியூயார்க் நகரம் மற்றும் நியூஜெர்சி போன்ற பெருநகர பகுதி சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றதால், ஏராளமான வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்த மழை வெள்ளத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved