இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகிரி ஏரியில் தரையிறங்க தயாராக இருந்த நீர் விமானம் விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இரண்டு விமானிகளை, ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதற்காக வந்த நீர்விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : இலங்கையின் நுவரெலியாவில் நீர் விமான விபத்து