Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 04:07 PM
By: Manigandan Raja

மோதல்களை தடுக்க தவறிய ஐ.நா :
உலக அளவில் நடைபெறும் முக்கிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியை தழுவியதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசா போரை ஐ.நா.வால் தீர்க்க முடியவில்லை என்றார். ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையை கொண்டு வந்தது அமெரிக்காதான் எனவும் மார்கே ரூபியோ பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved