தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரில் சோதனை..!

அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார்   காரில் சோதனை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு உசிலம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக ஆர்.பி. உதயகுமார் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் வழிமறித்து, காரில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் இருக்கிறதா? என சோதனை செய்தனர். சோதனையில் ஏதுவும் இல்லாததால் காரை அனுப்பி வைத்தனர்.
 

00 Comments

Leave a comment