தமிழ்நாடு

புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா

 புனித வனத்து அந்தோணியார் ஆலய  திருவிழா

 

திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய
திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகள் 300
மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு.

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய 140
வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை ,
சிவகங்கை , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கலிருந்து 800 காளைகள் கொண்டு
வரப்பட்டது. இந்த காளைகளை பிடிப்பதற்கு 300 மாடுபிடிவீரர்கள் போட்டியில்
கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் ஊர் சார்பில் கொண்டு
வரப்பட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள்
ஒன்றின் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள்
திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர் பிடியில் சிக்காமல் காளைகள்
துள்ளி குதித்து சென்றன. சில காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா,
பேன் , வெள்ளி காசு , கட்டில், பீரோ, மெத்தை, டிவி, சேர் டிவி டேபிள்,
ஹெல்மெட் உள்ளிட்ட பரிசுகள் விழாக்குழு சார்பில் வழங்கபட்டன.
அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. இந்த
ஜல்லிக்கட்டிற்க்கு பாதுகாப்பு பணிக்கு 200 க்கும் மேற்பட்ட போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போல் காயம் ஏற்படும் நபர்களை
சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

 

00 Comments

Leave a comment