தமிழ்நாடு

காதலால் சடலமான இளம்பெண்... சிறுவன் உட்பட 5 பேர் கைது | Sivaganga

சிவகங்கையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் கணவனை உதறிவிட்டு காதலனை நம்பிய வந்த இளம்பெண், கிணற்றில் சடலமாக கண்டுடெடுக்கப்பட்டார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக காதலித்தவனை நம்பி கட்டியவனை தவிக்கவிட்டு வந்த இளம்பெண் கொலை.

கண்ணுக்கு கண்ணாக கணவன் இருக்க, காதல் மோகத்தில் தன்பெயரோடு காதலன் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டு, தற்போது அநியாயமாக உயிரை விட்டவர் இவர் தான்..

தென்காசி மாவட்டம் வலசை அருகேயுள்ள காட்டுப்பகுதியிலுள்ள ஒரு கிணற்றிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்பைடயில் அங்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது சடலமாக மீட்கப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள இருவாணி வயல் கிராமத்தைச் சேர்ந்த வினோதினி என்பதும் அவரை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை நடத்தியதில் வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சித் என்பவருடன் நட்பு ஏற்பட்டது தெரிய வந்தது. chatல் ஆரம்பித்த இவர்களின் நட்பு, வினோதினி தனது கையில் இருவர் பெயரையும் பச்சை குத்தும் அளவிற்கு சென்றதாக தெரிகிறது. அதுவே தற்போது அவரை அடையாளம் காணவும் உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு பெற்றோர்கள் வேறொருவரை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன பின்பும் வினோதினியும், மனோரஞ்சித்தும் நீண்ட நேரம் போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் காதலன் மனோரஞ்சித்தை மறக்கமுடியாமல் தவித்து வினோதினி, கணவனை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனின் கிராமத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

காதல் மோகத்தில் இருவரும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல காதல் மோகம் கொஞ்சமாக தெளிய, இருவருக்கும் மத்தியில் மோதல் ஆரம்பித்தாக கூறப்படுகிறது. வினோதினி, இன்ஸ்டாகிராமில் பல ஆண்கள் உடன் பழகியதை கண்டுபிடித்த மனோரஞ்சித், அது தொடர்பாக காதலியிடம் வாக்குவாதம் செய்ததோடு, ஆத்திரத்தில் வினோதினியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் வினோதினி இறந்துவிட, நண்பர்களை உதவிக்கு அழைத்த மனோரஞ்சித், அவர்கள் உதவியுடன் காதலியின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில் வீசி விட்டு எதுவும் நடக்காதது போல் கோவைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவையில் பதுங்கி இருந்த மனோரஞ்சித், உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் வலசை மற்றும் கடையநல்லூர் பதுங்கியிருந்த சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்தனர். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக கட்டியவனை விட்டுவிட்டு காதலனை நம்பி வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது

00 Comments

Leave a comment