தமிழ்நாடு

இரண்டாவது சீசனுக்கு ரெடி ஆகுங்க.. வரப்போகிறது கண்கவர் மலர் கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் நடவு பணியை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் தொடங்கப்படுவது வழக்கம். இந்த சீசனில் தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள்.

குறிப்பாக இரண்டாவது சீசனின் போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தா காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பல வகையான மலர் செடிகள் நடவுக்காக இறக்குமதி செய்யப்படுகின்றன.

இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்ட், ஆஸ்டர், வெர்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுணியா போன்ற பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டும் பூங்காவிலேயே விதைகள் உற்பத்தி செய்யப்பட்டும் சுமார் 4 லட்சம் வண்ண மலர் செடிகள் இரண்டாவதுபருவ மலர் கண்காட்சிக்கு மலர் பாத்திகளில் நடவு பணி இன்று தொடங்கியது. 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, லில்லி ஆலந்தூரியம் போன்ற 30 வகையான மலர் செடிகள் நடவு பணியும் இன்று துவங்கியது.

இந்நிலையில் இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவும் பணியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் கே பிரபாகர், உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இரண்டாவது சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு மூன்று லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தெரிவித்தார்.

இந்தத் மலர் தொட்டிகள், காட்சி திடலில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக ஒரு மாத காலம் வரை திறந்து வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

00 Comments

Leave a comment