இந்தியா

உடனே தாக்கல் செய்யுங்கள்! வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

2022-2023ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், வரி செலுத்துவோர் விரைவில் கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 5கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்திருக்கும் நிலையில், அதில் நான்கு கோடியே 46லட்சம் கணக்குகள் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கப்பட்டுள்ளன. காலக்கெடுவுக்குள் வாய்ப்பை தவறவிட்டால், நாளை முதல் சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 5 ஆயிரம் ரூபாயும், அதற்கும் குறைவாக ஊதியம் பெறுவோர் ஆயிரம் ரூபாயும் தாமத கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment