இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி அறிவிப்பு

மத்திய அரசுக்கு எதிராக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி அறிவிப்பு

 

மத்திய அரசுக்கு எதிராக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி அறிவிப்ப டெல்லி எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு
இரும்பு மற்றும் கான்கிரீட் தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு.

 

மத்திய அரசுக்கு எதிராக தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதால், டெல்லியின் எல்லை பகுதிகளில் இரும்பு மற்றும் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானா மாநில எல்லையான ஷாம்பு ((Shambhu)), திகிரி, காசிப்பூர், சிங்கு பகுதிகளில், இரும்பு தடுப்புகள், கான்கிரீட் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரும் 13ஆம் தேதி ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி செல்ல போவதாக அறிவித்துள்ளன.b

00 Comments

Leave a comment