இந்தியா

ம.பி. போஜ்ஷாலா ஆலய-மசூதி வளாகம் குறித்த வழக்கு

ம.பி. போஜ்ஷாலா ஆலய-மசூதி வளாகம் குறித்த வழக்கு

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா ஆலய-மசூதி வளாகத்தில் தனது ஆய்வை முழுமையாக்க இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மேலும் எட்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. இந்த வளாகத்திற்கு இந்துகளும், முஸ்லீம்களும் உரிமை கொண்டாடும் நிலையில், இது தொடர்பான வழக்கை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தோர் கிளை விசாரித்து, அங்கு ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் ஆய்வை துவங்கினாலும், அதில் கிடைத்த பொருட்களின் தன்மை மற்றும் கட்டிட அமைப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய மேலும் கால அவகாசம் தருமாறு நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதை ஏற்று விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
 

00 Comments

Leave a comment