இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பின் 6 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு 50 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 44 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : ஐடி ஊழியர்களை குறி வைத்து மடிக்கணினி திருட்டு