இந்தியா

ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி தராததால் சிறுவன் தீக்குளிப்பு

ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி தராததால் சிறுவன் தீக்குளிப்பு

சென்னை புழல் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தீக்குளித்த 17 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புழல் காவாங்கரையில் இலங்கை மக்கள் மறுவாழ்வு முகாமில் சிவலிங்கம் - ஷீலா தம்பதியர் மகன் சாமின்ஷன் உடன் வசித்து வந்தனர். சாமின்ஷன் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்க 2000 ரூபாய் கேட்ட நிலையில் பெற்றோர்கள் தற்போது பணம் இல்லை சிறிது நாட்கள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த சாமின்ஷன் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

 

00 Comments

Leave a comment