தமிழ்நாடு

சந்தா கொச்சார் தம்பதியை கைது செய்தது தவறானது

சந்தா கொச்சார் தம்பதியை கைது செய்தது தவறானது

 

கடன் மோசடி வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சந்தா கொச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கொச்சார் ஆகியோரை சிபிஐ கைது செய்தது அதிகார துஷ்பிரயோகம் என மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த இருவருக்கும் மும்பை உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய இடைக்கால ஜாமின் செல்லுபடியாகும் எனவும் கடந்த ஆறாம் தேதியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரையும் கைது செய்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்களையும், சூழலையும் நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் சட்டத்தை பின்பற்றாமல் சிபிஐ மேற்கொண்ட கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

00 Comments

Leave a comment