தமிழ்நாடு

சி.ஆர்.பி.எஃப் காவலர் மீது ஆட்சியர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு

சி.ஆர்.பி.எஃப் காவலர் மீது ஆட்சியர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தபால் ஓட்டளித்து வீடியோ வெளியிட்ட சி.ஆர்.பி.எஃப். காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காளையார் கோவில் அருகேயுள்ள வேம்பனியைச் சேர்ந்த சதீஷ்குமார், சி.ஆர்.பி.எஃப் காவலராக பணிபுரிந்து வருகிறார். தபால் வாக்களித்த சதீஷ்குமார், தான் ஓட்டளித்த படிவத்தை வேட்பாளர் படங்களுடன், யாருக்கு ஓட்டளித்தேன் என்பதை தெரிவிக்கும் விதத்தில் மொபைல் போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்,காவலர் மீது சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பெயரில் காவலர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment