தமிழ்நாடு

மதுரை காவலர்களுக்கான ’CL APP’ எனப்படும் செயலி அறிமுகம்

மதுரை காவலர்களுக்கான ’CL APP’ எனப்படும் செயலி அறிமுகம்

மதுரை மாநகர காவலர்களுக்கான் ஒருங்கிணைந்த விடுமுறைக்கான செல்போன் செயலியான
CL APPஐ அறிமுகப்படுத்தி காவலர்களுக்கு செல்போன் வழங்கிய தமிழக காவல்துறை
டிஜிபி சங்கர் ஜிவால்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மதுரை மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மதுரை மாநகர
காவலர்களுக்கான ஒருங்கிணைந்த விடுமுறைக்கான செல்போன் செயலியான CL APPஐ
அறிமுகப்படுத்தினார்

இதனைத்தொடர்ந்து மூன்று காவலர்களிடம் கைப்பேசிகளை வழங்கி ஒப்படைத்து இந்த
செயலியை தொடங்கி வைத்தார்

இந்த செயலி மூலமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ் செயல்படக்கூடிய
காவல்நிலையங்கள், ஆணையர் , துணை ஆணையர் , உதவி ஆணையர் அலுவலகத்தில்
பணிபுரியக்கூடிய காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்புகளை CL APP செயலி
மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த CL APP மூலமாக மாநகர காவல்துறையினர் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்
மேலும் மாநகர காவல்துறையினர் எடுத்துக் கொண்ட விடுமுறைகளின் விவரங்களை
அறிந்துகொள்ளலாம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில் வழங்கக்கூடிய ஆலோசனைகள்,
சுற்றறிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து CL APPல் காவல்துறையினர்
அறிந்துகொள்ளும் வசதிகள் உள்ளது.

இந்த CL APP மூலமாக அவசர காலகட்டத்தில் விடுமுறை எடுக்கும் மாநகர
காவல்துறையினர் எளிதாக APP மூலமாக தங்களது விடுமுறையை
விண்ணப்பித்துகொள்ளலாம், அதன் மூலமாக விடுமறைக்கான அனுமதியையும் பெறலாம், இந்த
செயலி மதுரை மாநகர காவல்துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளது

இந்த CL APP அறிமுக நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி கண்ணன், மாநகர காவல் ஆணையர்
லோகநாதன், மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி, காவலர் நலன் ஐஜி நஜ்முல் ஹோடா உள்ளிட்ட
காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

00 Comments

Leave a comment