தமிழ்நாடு

மகன் கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியதை கண்டு ரசித்த சூர்யா.!

மகன் கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியதை கண்டு ரசித்த சூர்யா.!

தனது மகன் தேவ் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியதை கண்டு ரசித்த நடிகர் சூர்யா அதனை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்தார். நடிகர் சூர்யாவின் மகன் தேவ், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் கராத்தே பள்ளியில் கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றார். இதனை நடிகரும், அவரது தந்தையுமான சூர்யா மற்றும் நடிகர் சிவக்குமார் கண்டு ரசித்தனர்.
 

00 Comments

Leave a comment